முழுமையான டேலி ஈஆர்பி ஜிஎஸ்டி உடன் தமிழ் வழியில்
முழுமையான டேலி ஈஆர்பி ஜிஎஸ்டி உடன் தமிழ் வழியில்
வணக்கம்,
நான் உங்கள் ஜி. சிவா, கடந்த 20 வருடங்களாக கணிணி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். அங்கு பல்வேறு மென்பொருள்களை பயிற்றுவித்து மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறேன். தற்பொழது இணையதளத்தில் ஆன்லைன் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். இதில் ஏற்கனவே தமிழ் டைப்பிங், இங்கிலீஷ் டைப்பிங், வேர்ட், எக்ஸ்சல், பவர்பாயிண்ட் ஆன்லைன் பயிற்சிகள் இணைதளத்தில் வெளியிடப்பட்டு உங்கள் நல்ஆதரவை பெற்று வருகிறேன்.
தற்பொழது மேலும் ஓர் மைல்கல்லாக எனது ஆன்லைன் பயிற்சியில் டேலி ஈர்பி யுடன் ஜிஎஸ்டி பயிற்சியை வெளியிட்டுள்ளேன். இந்த பயிற்சி தற்பொழது அனைத்து சிறு மற்றும் பெருதொழில் நிறுவனங்களில் அலுவலக பணியில் இருப்பவர்கள் தெரிந்து வைத்துருக்க வேண்டிய மென்பொருள். இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை ஏற்படுத்தியவுடன் டேலி மென்பொருள் மதிப்பும் கூடியது. அனைவரும் இந்த மென்பொருளை பயன்படுத்தினால் மட்டுமே எளிதாக ஜிஎஸ்டி வரிகளை செலுத்து இயலும் என்ற அளவிற்கு எளிமைபடுத்தி வடிவமைத்து நமக்கு வழங்கி உள்ளார்கள். எங்கள் நிறுவனத்தில் பயிலும் பல மாணவர்கள் படிக்கும் பொழதே வேலைவாய்ப்பு பெற்று சென்று உள்ளனர்.
தற்பொழது நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் அதுவும் அலுவலக பணிக்கு வேலை தேடுபவராக இருந்தால் நீச்சயம் இந்த பயிற்சி மேற்கொண்டு எளிதாக வேலைவாய்ப்பை தட்டி செல்லலாம்.
தனியார் பயிற்சி நிறுவனத்தில் இப்பயிற்சியை மேற்கொள்ள ரூ 5000 முதல் ரூ.8000 வரை செலுத்தி படிக்க வேண்டி இருக்கும் ஆனால் இந்த டேலி பயிற்சியை இங்கு மிக குறைந்த கட்டணத்தில் படிக்க இருக்கீர்கள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறோம்.
இந்த பயிற்சியை மேற்கொள்ள அக்கௌண்டிங் அறிவே தேவையில்லை. இந்த பயிற்சியில் உங்களுக்கு டேலியில் அடிப்படையிலிருந்து தற்பொழது உள்ள ஜிஎஸ்டி, பேரோல் போன்ற அனைத்து அட்வான்ஸ் ஆப்சஷன்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக சொல்லி தந்துள்ளேன் . நீங்கள் 8 ஆம் வகுப்பு மாணவராக இருந்தால் கூட இந்த டேலியை கற்று பயன் பெறலாம். மேலும் பி.காம், எம்.காம் மற்றும் அக்கெளன்ட் முதன்மையாக எடுத்து படித்திருக்கும் அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டிய மென்பொருள் இந்த டேலி ஈர்பி.
கணிணி கல்வி துறையில் எனது 20 வருட அனுபவத்தின் காரணமாக உங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டமாக வகுத்து எளிமை படுத்தி தந்துள்ளேன். மேலும் டேலியில் அடுத்து வரவிருக்கும் டேலி ப்ரைம் பயிற்சியையும் இப்பயிற்சியில் சேருபவர்களுக்கு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அவ்வபொழது டேலி மென்பொருள் மாற்றங்கள் கொண்டு வரும்பொழது இப்பயிற்சி பாடத்திட்டங்களும் மாற்றியமைத்து நீங்கள் இலவசமாக பயிலலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறை இந்த பயிற்சியில் சேர வேண்டியது மட்டுமே. வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்கள் உங்களுக்கு சொந்தமானவை. எப்பொழதும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள இயலும் என்பதையும் நினைவுட்ட விரும்புகிறோம்.
இப்பயிற்சியில் சேர்ந்து வாழ்வில் வளம்பெற எனது வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
க.சிவா
உடிமி ஆசிரியர்,
Tally ERP in Tamil
Url: View Details
What you will learn
- டேலி மென்பொருள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்
- நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை நாமே கையாலலாம்
- உங்கள் பகுதியிலேயே அக்கௌன்டன்ட் வேலைகள் பெற இயலும்
Rating: 4.2
Level: All Levels
Duration: 9 hours
Instructor: Shiva G
Courses By: 0-9 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
About US
The display of third-party trademarks and trade names on this site does not necessarily indicate any affiliation or endorsement of course-link.com.
View Sitemap